என் சாவுக்கு நானே காரணம்….! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி….!

மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது.

அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் அல்லது அந்த பிரச்சனையின் வீரியம் குறையும். இதை அனைவரும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராமசுப்பு. தற்சமயம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய 2வது மகள் நித்யஸ்ரீ கேகே நகர், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த நித்யஸ்ரீ திடீரென்று அடுக்குமாடி குடியிருப்பின் 10 மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இந்த விபத்தில் நித்யஸ்ரீ அதுதான் அடைந்தார் மேலும் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அசோக் நகர் காவல் துறையை சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். இந்த கடிதம் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த கடிதத்தில், இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு, எனக்கு கிடைத்த அம்மா அப்பா மிகவும் நல்லவர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Post

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... குஷியில் இல்லத்தரசிகள்..

Thu Feb 16 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

You May Like