நள்ளிரவில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற கும்பல்.. எல்லையில் 50-க்கும் மேற்பட்டோர் கைது!

626c567df533406fda73e5d60990e30fc741b84f614e6337810134202a644306

பிஎஸ்எஃப் வீரர்களின் தீவிர கண்காணிப்பால், மேற்கு வங்கத்தில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் பிடிபட்டுள்ளனர். நள்ளிரவில் லோஹாகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவம், எல்லையோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோஹாகஞ்ச் கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தை பயன்படுத்தி ஒரு பெரிய குழு எல்லைப் பகுதியை நோக்கி வந்ததை பாதுகாப்புப் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த வீரர்கள், குழுவினரின் நகர்வைத் தடுத்து நிறுத்தினர்.

இந்த நடவடிக்கையின்போது உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினருக்கு உதவியுள்ளனர். கிராம மக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக எல்லையை கடக்க முயன்றனர் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Also Read: 3 தேசிய விருதுகள்.. பத்மஸ்ரீ கௌரவம்.. ‘காலா’ பட நடிகர் திடீர் மரணம்!

Saranya

Next Post

'பொட்டு அம்மன்' வில்லனா இவரு?. 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்ற சுரேஷ் கிருஷ்ணா!

Thu Oct 8 , 2026
2000-களின் தொடக்கத்தில் தொலைக்காட்சி வாயிலாகத் தமிழ் அல்லது தெலுங்குப் படங்களைப் பார்த்திருந்தால், ‘பொட்டு அம்மன்’ படத்தில் நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவின் தோற்றம் நிச்சயமாக உங்களை மிரட்டியிருக்கும். 2000ஆம் ஆண்டு வெளியான தமிழ் – தெலுங்கு இருமொழிப் படமான இதில் (தெலுங்கில் ‘துர்கா’ என்ற பெயரில் வெளியானது), அவர் அகோரி போன்ற தோற்றத்தில் மந்திரவாதி என்ற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட தலைமுடி, மிரட்டலான தோற்றம் மற்றும் அசாத்தியமான நடிப்பு […]
pottu amman Suresh Krishna 30kb

You May Like