“அம்மா… எங்களை விட்டுடும்மா!” கதறிய பிஞ்சுகள்.. கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற கொடூர தாய்!

a2fe6dcd6a56567093a2a5d878bcee8676879393245fd817d1bf1697c32a493d

கேரளாவில் 5 வயது மகளும், 3 வயது மகனும் உயிரிழந்த சம்பவத்தில் தாயே கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு குழந்தைகளும் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறி தாய் நாடகமாடிய நிலையில், அவரது பதில்களில் ஏற்பட்ட முரண்பாடு வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் ஜான் குமார் (36), மனைவி நிவேத்யா (29) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (5), ராபின் கிறிஸ்டோபர் (3) என இரு குழந்தைகள் இருந்தனர். ஜெனிபர் அருகிலுள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தைகள் இருவரும் இருந்தனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கியிருப்பதாக நிவேத்யா சத்தமிட்டுள்ளார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். குழந்தைகளின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

விசாரணையின்போது நிவேத்யா அளித்த பதில்களில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விவரங்களில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

அப்போது நிவேத்யாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த உறவுக்கு குழந்தைகள் தடையாக இருந்ததாகவும், இதனால் அவர்களை கொலை செய்ய நிவேத்யா திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, அவர்கள் தவறி தொட்டிக்குள் விழுந்ததாக நிவேத்யா நாடகமாடியதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.

இதையடுத்து நிவேத்யாவை போலீசார் கைது செய்தனர். குழந்தைகளின் கொலையில் அவருடன் தொடர்பில் இருந்த நபருக்கும் பங்கு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: நோயாளியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ்.. வழியில் நடந்த கோர விபத்து; செவிலியர் பலி!

Saranya

Next Post

தாராபுரத்தில் மாறிய தேர்தல் கணக்கு.. களத்தில் தீவிரமாகும் த.வெ.க. பிரசாரம்!

Thu Oct 1 , 2026
தாராபுரம் தொகுதி யாருடைய அரசியல் செல்வாக்கில் உள்ளது என்ற விவாதம் இடைத்தேர்தல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் நிலையில், த.வெ.க. தரப்பும் தொகுதியில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. தாராபுரம் தொகுதியின் சமீபத்திய தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரே கட்சி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியாக அது அமையவில்லை. 2001-ல் பாமக, 2006-ல் திமுக, 2011-ல் […]
TVK Vijay 2026

You May Like