தேர்தல் நெருங்கும் நேரத்தில் கவர்ச்சியான பெயர் மாற்றி “பேச் ஒர்க்”…! ஸ்டாலினை விமர்சித்த நயினார்

nainar nagendran mk Stalin 2025

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி “மருத்துவப் பயனாளிகள்” என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு? ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி “பேச் ஒர்க்” செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Vignesh

Next Post

நம்பிக்கையே போச்சு.. புஸ்ஸி ஆனந்தை நீக்கும் விஜய்..!! அடுத்த மூவ் இப்படித்தான் இருக்கும்..!! வேற லெவல் சம்பவம்..!!

Thu Oct 9 , 2025
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்வாக அமைப்பையே மாற்றியமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இனி அரசியல் களத்தில் வேறொரு விஜய்யை காண வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகள், விஜய்யின் தவெக எதிர்கொள்ளும் அடிப்படை நிர்வாக சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது […]
Vijay Bussy Anand 2025

You May Like