மகளிருக்கான வெற்றிப் பயண திட்டத்திற்கு வந்த புது சிக்கல்..!! இடைக்கால தடையா? ஐகோர்ட்டில் பரபரப்பு வழக்கு..!!

TN BUS CM Vijay 2026

தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


முந்தைய திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த ‘விடியல் பயணத் திட்டம்’, தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, காந்தி ஜெயந்தியான கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பதால் தனியார் பேருந்துகளுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்தமாக தொழிலையே கைவிட வேண்டிய விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சம உரிமை விதிகளுக்கு எதிரானது என்றும் ஆண்டுக்கு ரூ.6,000 கோடியை அரசே மானியமாக ஏற்கும் சூழலில், தனியார் பேருந்துகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கி இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு இத்திட்டம் அவசரமாக செயல்படுத்தப்படுவதாகவும், இதற்கான முறையான எந்தவொரு அரசாணையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இத்திட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நாளை (அக். 5) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Read More : தாய்மாமன் தங்க மோதிரம் எங்கே? செவிலியரை மண்வெட்டியால் கொடூரமாக தாக்கிய வாலிபர்..!! கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

Next Post

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தேர்தல் கமிஷன் கெடுபிடி..!! பின்பற்ற தவறினால் சிறை..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Sun Oct 4 , 2026
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 126-இன் கீழ் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவோ, பங்கேற்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, வானொலி, […]
tn election campaign

You May Like