டெபிட் கார்டை வீட்டில் மறந்து சென்றுவிட்டாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை. UPI வசதி கொண்ட ஏடிஎம்கள் மூலம், கையில் டெபிட் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட பிரபலமான UPI செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள பல வங்கி ஏடிஎம்களில் தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. UPI மூலம் பணம் எடுக்க விரும்புபவர்கள், முதலில் இந்த வசதி உள்ள ஏடிஎம் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஏடிஎம் திரையில் தோன்றும் ‘UPI Cash Withdrawal’ விருப்பத்தைத் தேர்வு செய்து, எவ்வளவு தொகை எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட வேண்டும்.
இதையடுத்து, ஏடிஎம் திரையில் QR குறியீடு தோன்றும். உங்கள் செல்போனில் உள்ள UPI செயலியைத் திறந்து அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், ஏடிஎம்மில் தேர்வு செய்த தொகையை சரிபார்த்து, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட UPI PIN-ஐ உள்ளிட்டு பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். சரிபார்ப்பு முடிந்ததும், ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
UPI மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான வரம்பு வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. பொதுவாக, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை பணம் எடுக்க முடியும். மேலும், UPI மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
எனினும், அனைத்து ஏடிஎம்களிலும் இந்த வசதி கிடைக்காது என்பதால், பணம் எடுப்பதற்கு முன்பு அந்த ஏடிஎம்மில் UPI Cash Withdrawal வசதி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.
Also Read: “உன்னாலதாண்டா எங்க அக்கா செத்தா!” அக்காவின் கள்ளக்காதலனை கொடூரமாக கொலை செய்த சகோதரன்…



