இந்தியா – பாகிஸ்தான் மோதல் இல்லை!. 2027 டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு!. அதிர்ச்சி கொடுத்த ஐசிசி!.

U19 T20 World Cup 30kb

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2027-ம் ஆண்டுக்கான மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை வங்கதேசம் மற்றும் நேபாளம் நாடுகள் இணைந்து நடத்துகின்றன.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெறவில்லை. நடப்புச் சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதில் இந்தியாவுடன் அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் சமோவா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

குரூப் சி: ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE).

குரூப் டி: இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா, ஸ்காட்லாந்து.

இந்திய அணியின் முதல் போட்டி: ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் ஆட்டத்தில் தொடக்க நாடான வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணிகள் மோதுகின்றன. அதே நாளில் நடைபெறும் மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா – நைஜீரியா, இலங்கை – ஸ்காட்லாந்து, இங்கிலாந்து – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. நடப்புச் சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 22-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது.

குரூப் சுற்றுகள் ஜனவரி 26-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதில் தகுதிபெறும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ஆம் தேதி அரையிறுதிப் போட்டிகளும், பிப்ரவரி 6-ஆம் தேதி சிட்டகாங் (Chattogram) நகரில் மாபெரும் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு முறையே பிப்ரவரி 5 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய தேதிகள் ரிசர்வ் நாளாக (Reserve Day) அறிவிக்கப்பட்டுள்ளன.

1newsnationuser5

You May Like