எகிறிய வெங்காயம் விலை..! மத்திய அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..! சென்னைக்கு விரையும் 840 டன்..!!

Onion 2026

நாடு முழுவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு தனது அவசரகால கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மராட்டிய மாநிலத்தின் மன்மாட் ரயில் நிலையத்தில் இருந்து, வெங்காய மூட்டைகளைச் சரக்கு ரயிலில் ஏற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


பருவமழை தாமதம் மற்றும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெய்த குறைவான மழைப்பொழிவு காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னை, டெல்லி, கேரளா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.50 முதல் ரூ.65 வரை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க, ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ எனப்படும் பிரத்யேக சரக்கு ரயில்கள் மற்றும் கனரக லாரிகள் மூலம் வெங்காயத்தை முக்கிய நகரங்களுக்கு மத்திய அரசு நேரடியாக விநியோகித்து வருகிறது.

மத்திய அரசின் இந்தத் தொடர் தலையீட்டின் காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநிலம் லாசல்கான் ஏபிஎம்சி-யில் கடந்த நான்கு நாட்களில் வெங்காயத்தின் மொத்த விலை 10 சதவீதம் வரை சரிந்துள்ளது. அங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,250 ஆக இருந்த விலை ரூ.3,800 ஆக குறைந்துள்ள நிலையில், தற்போது சென்னைக்கு அனுப்பப்படும் இந்த 840 டன் வெங்காயம் உள்ளூர் சந்தைகளுக்கு வரும்போது சில்லறை விலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்? முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவரா? யார் இந்த கிருஷ்ணகுமார் ரெட்டி?

Next Post

கிணற்றுக்குள் சித்தர் ஜீவசமாதி..! கேட்கும் வரங்களை கொடுக்கும் அய்யனார்..! மிகவும் சக்திவாய்ந்த கோயில் தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா?

Sun Aug 30 , 2026
கடலூர் மாவட்டம், புதுச்சேரி-விழுப்புரம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை செலுத்தும் புகழ்பெற்ற அருள்மிகு அழகு முத்து அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து ஏம்பலம் அல்லது வில்லியனூர் மார்க்கமாக சென்றடையும் வகையில் அமைந்துள்ள இத்திருத்தலம், அதீத ஆன்மீக அதிசயங்களை உள்ளடக்கியது. கோயில் நுழைவு வாயிலில் பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் அழகு முத்து அய்யனாரின் வலது கையில் உள்ள பிரம்மாண்ட வாளில், […]
Ayyanar Temple 2026

You May Like