தமிழ் மாெழி இலக்கிய திறனறித் தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு 25 ஆம் தேதிக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15-ம் தேதி நடைபெற்றது. இது சம்பந்தமான தற்காலிக விடைகுறியீடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 25-ம் […]
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மாஸ்கோ இணைக்கப்பட்டது மற்றும் ரஷ்யாவில் உள்ள அனைத்து பிராந்திய […]
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், அமெரிக்காவில் 80% இறப்பு விகிதத்தைக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, ஓமிக்ரான் மற்றும் அசல் வுஹான் விகாரத்தை இணைத்து – ஒரு ஹைப்ரிட் வைரஸை உருவாக்கியதாகக் கூறி உள்ளது. இந்த வைரஸ் ஆய்வில் 80 சதவீத எலிகளைக் கொன்றது. கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் […]
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில்,பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ […]
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அடுத்த 8 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். […]
இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் […]
அடர்த்தியான தலைமுடியுடன், கருகருவென தலைமுடி இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு கலாச்சாரத்தால் தலைமுடி மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உங்கள் கூந்தலை அழகாக மாற்றியமைக்க நீங்கள் கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இது அடர்த்தியான கூந்தலையும் கருமை நிறத்தையும் கொடுக்கும். அதை இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்று உணவுகளில் அதிகமாக இராசயனங்கள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்தை மட்டுமல்லாமல் தலைமுடியையும் கூட பாதிக்கிறது. அதனால் […]
தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்ல ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம் என்கின்றார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் […]
நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையிடம் தாய் கேட்டபோது குழந்தை டிரைவராக பணியாற்றிய […]
பள்ளி மாணவரின் தாய் பத்து ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளித்ததால் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரிபள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. புகார்களின் பேரில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல் 2010ல் மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த […]