புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 8,482 வாக்குகள் அதிகம் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸின் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளையும் பெற்றனர். இத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேது 2,664 வாக்குகள் […]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தின் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு, தற்போது இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’ பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், “சேனாபதி இஸ் பேக் வித் ஜீரோ டாலரன்ஸ். தி ரிசர்ஜென்ஸ் பிகின்ஸ் […]

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்ட 340 விரைவு மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாகத் தரம் மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மகளிர் இலவசமாகப் பயணிப்பது மட்டுமின்றி, அதே பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கும் பயண தூரத்திற்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.15 வரை டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் […]

வீட்டில் சமையலறையில் திடீரென பரவும் எல்.பி.ஜி கேஸ் வாசனையை “சிறிது நேரத்தில் சரியாகிவிடும்” என்று ஒருபோதும் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது. காற்றில் கலக்கும் எரிவாயு அதிக அடர்த்தியை எட்டும்போது, மிகச்சிறிய தீப்பொறி கூட கண் இமைக்கும் நேரத்தில் பெரும் வெடிப்பையோ தீ விபத்தையோ ஏற்படுத்திவிடும். மேலும், இந்த வாயுவை நீண்ட நேரம் சுவாசிப்பது மூச்சுத்திணறல், தீவிர தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தை உண்டாக்கும் அபாயம் கொண்டது. எனவே, வாசனை தெரிந்த நொடியே […]

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ., சந்தாதாரர்கள் தங்களது பி.எஃப் சேமிப்பு பணத்தை யுபிஐ செயலிகள் வாயிலாக நொடிப்பொழுதில் பெற்றுக் கொள்ளும் புரட்சிகரமான புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்பச் சோதனை ஓட்டம் முன்னணி வங்கிகளுடன் இணைந்து தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான நீண்ட […]

ஜோதிடத்தில் ஒருவரது பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒருவரின் குணநலன்கள், வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணிப்பதில் நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிட்ட தெய்வங்கள் தொடர்புடையதாகவும் ஆன்மிக நம்பிக்கைகள் நிலவுகின்றன. அந்த வகையில், தங்களது பிறந்த நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது மன அமைதியையும், ஆன்மிக நம்பிக்கையையும் அதிகரிக்க உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக […]

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை இயல்பை விட மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால் உருவாகும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு, பூமி இதுவரை கண்டிராத மிகக் கடுமையான வெப்ப அலைகளை ஏற்படுத்தக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதலுடன் எல் நினோவும் கைகோர்த்துள்ளதால், 1950-ஆம் ஆண்டிற்கு பிறகு பூமி சந்திக்காத […]

சமூக வலைதளங்களில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் கல்வியாளராகவும் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வந்த பிரபல மலையாள யூடியூபர் நிஷா ரஃபேல் மீது, 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருச்சூர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் தளங்களில் அறிவுரைகளும் உத்வேகமும் பேசி வந்த பிரபலம் ஒருவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கேரளம் முழுவதும் […]

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான கைது அதிகாரம் ரத்து செய்யப்படுகிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வரம்பு 1 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து வரும் மூத்த தம்பதியினரின் வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு குடியிருக்க வாடகை வீடு தேவைப்படுவதாக கூறி, அந்த முதியவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவர்களின் வயது முதிர்வையும் தனியாக இருப்பதையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் […]