அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உயர்கல்வி நிறுவனமான கொலராடோ டென்வர் பல்கலைக்கழகம் (CU Denver), இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தனது புதிய வெளிநாட்டு வளாகத்தை அமைக்கவுள்ளது. இந்தியாவில் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள முதல் அமெரிக்கப் பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நுழையும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான விருப்பப் பட்டயத்தை (Letter of Intent – LoI) இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் […]

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இருப்பினும், அவற்றின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ‘கிளாட் ஏஐ’ (Claude AI) வழங்கிய வழிகாட்டுதலை நம்பி, ஆபத்தான மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? […]

உத்தரப் பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள குடியிருப்பு குருகுலத்தில் நிலத்தடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 5 மாணவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நச்சு வாயு தாக்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரா மாவட்டம் விரிந்தாவனின் சைதன்ய விஹார் பகுதியில் இந்த குருகுலம் […]

தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரம் தொடர்பாக திமுகவும் காங்கிரஸும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் SIR-க்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் இதே விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது ஏற்பட்டுள்ள வாக்காளர் பெயர் நீக்கங்கள் […]

உலக சினிமா வரலாற்றில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை, ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தை முந்தி மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பான Avengers: Endgame மீண்டும் கைப்பற்றியுள்ளது. உலகளவில் 2.925 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.28,300 கோடி) கோடிக்கு மேல்) வசூலித்து, அவதார் படத்தின் 2.923 பில்லியன் டாலர் வசூல் சாதனையை எண்ட்கேம் திரைப்படம் மிக குறைந்த இடைவெளியில் முறியடித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக […]

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் தீக்குளிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் 16 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி உயிரிழந்ததை தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் கணினி ஆபரேட்டராக தற்காலிகமாக பணியாற்றி வந்தவர் ராஜேஸ்வரி. உப்பரப்பாளையத்தைச் சேர்ந்த இவர், கடந்த மாதம் 21-ஆம் தேதி மாலை […]

அரசுப் பணிக்காக தயாராகி வரும் தமிழக இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமானதாக மாறியுள்ளது. ஒரே போட்டித் தேர்வு மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேரும் வாய்ப்பை வழங்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பில் இடம்பெற்றுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் இளநிலை உதவியாளர் வரை பல்வேறு அரசுப் பணிகளுக்கு இந்தத் தேர்வு மூலம் ஆட்கள் […]

2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான எதிர்கால ஹோஸ்ட் பட்டியலில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) வெளியிட்டுள்ள அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு இந்த ஒலிம்பிக் கனவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியுடன் தீவிர மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தத் […]

கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சாடிவயல் வனச் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த காட்டுப் […]

சென்னையில் பல ஆண்டுகளாக நீடித்த குடும்பப் பிரச்சினை தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. மனைவி மற்றும் குழந்தை திடீரென காணாமல் போனதாக கணவர் அளித்த புகாரில், வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் 150 சவரன் நகைகளும் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீஸ் நடவடிக்கையில் திருப்தி இல்லாமல் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தற்போது அந்தப் பெண் கேரளாவில் பிடிபட்டுள்ளார். வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன், இலக்கியாவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு […]