தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி […]

ஈரான் உடனான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டுகொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது.. ஏனெனில் போர் தொடங்கியதில் இருந்தே அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் இஸ்ரேலி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.. அந்த வீடியோவில் பேசிய அவர் தனது மரணம் குறித்த கூற்றுகளை மறுத்தார். தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது. தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக […]

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘One Battle After Another’ திரைப்படம் 6 விருதுகளை வென்று விழாவில் அசத்த்யது.. ரியான் […]

ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.. மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான […]

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]

நமது உணவு முறையில் உப்பு ஒரு மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள் சுவையற்றுப் போவதால், ஒவ்வொரு வீட்டிலும் உப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான உப்பை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் உட்கொள்ளும் உப்பின் அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது நமது உடலில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனாலேயே, நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்த […]

ஈரான் – இஸ்ரேல் போர் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது.. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல், டீசலை அதிகமாக சேமிக்க தொடங்கி உள்ளனர்.. இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலை […]