இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாக சந்தித்துவரும் செயல்பாட்டு தடங்கல்கள் காரணமாக, பெருமளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் விமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிசம்பர் 7க்குள் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ அதிகளவில் ரத்தான மற்றும் தாமதமான விமானங்களால் பல […]

புத்தியின் அதிபதியான புதன், இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிப்பதால், எந்தத் துறையிலும் இருப்பவர்களின் லட்சியம் அதிகரிக்கும். உயர்ந்த லட்சியங்களும் உயர்ந்த இலக்குகளும் உருவாகும். குறிப்பாக உயர் பதவிகளில் கவனம் செலுத்தப்படும். அவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வலுவான முயற்சிகளை மேற்கொள்வார்கள். புதனின் இந்தப் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும்.. […]

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இந்த நாளில் அம்பேத்கரின் சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. மேலும் சமத்துவக் கொள்கைகள், சமூக நீதிக்கான போராட்டம், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிமை பெற்றுத்தந்த பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் […]

கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதெ இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

இண்டிகோ நெருக்கடி 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், சனிக்கிழமை மட்டும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், பயணிகள் மாற்று வழிகளை தேர்வு செய்யத் தொடங்கியதால், சில விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் விலை 5 முதல் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த நிலையில் மத்திய அரசு […]

பிரபல குணச்சித்திர நடிகர் ஜீவா ரவி இன்று ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் விரைவில் இணையப் போவதாக தெரிவித்தார்.. மேலும் “ நான் தற்போது உயிரோடு இருப்பதற்கு காரணமே செங்கோட்டையன் தான்.. எனவே தவெகவில் இணைந்த செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து சொல்ல வந்தேன்.. மரியாதை நிமித்தமாக செங்கோட்டயனை சந்தித்தேன்.. நானும் விரைவில் தவெகவில் இணைய […]

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில், மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலு நாச்சியார் என பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் மேம்பாலம் பெயர் […]

திருப்பரங்குன்ற விவகாரத்தை வைத்து பாஜக மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. மேலும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டி இருந்தார்.. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக சார்பில் இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணத்தை முடித்து திரும்பு முன், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்றார்.. இந்த உயர்நிலை விருந்தின் மெனு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த மெனு உணவு ஸ்டார்டர் முதல் முக்கிய உணவுகள், வரை இந்தியாவின் பாரம்பரிய மற்றும் பிரபலமான சைவ உணவுகளை கொண்டிருந்தது. ஆனால் இணைய பயனர்கள் இதில் இறைச்சி உணவுகள் இல்லை, மதுபானம் இல்லை […]