fbpx

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக …

கனமழையின் காரணமாக தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக 16.05.2024 முதல் 22.05.2024 முடிய மொத்தம் 15 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 40 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில், ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 …

கேரளாவின் பல பகுதிகளில் கண்டது சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகினர். மேலும் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் …

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவடைந்து, இன்று (மே 22) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகர்ந்து, மே 24ஆம் …

Rain | தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்படியாக நாமக்கல்லில் அதிக மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு-மாடுகள் இறந்துள்ளன. 24 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதி முதல் …

தமிழ்நாட்டில் மதுரை, கோவை, டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான …

தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Rain | தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்றும் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை …

அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் …

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, …