fbpx

Landslide: சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆங்காங்கே 1500 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மாங்கன் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு …

புளோரிடா மாகாணத்தில் மியாமி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வுமையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக …

கொங்கன், கோவா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தெற்கு உத்தரபிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று வெப்ப அலை நிலவியது. தெற்கு ஹரியானா, டெல்லி, தெற்கு உத்தரப்பிரதேசம், தென்கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் …

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06.06.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று (06.06.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் …

Bengaluru: கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் 111 மிமீ மழை பெய்துள்ளது, இது 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது, ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பெய்தது என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) விஞ்ஞானி புவியரசன் கூறுகையில், 133 ஆண்டுகளில் ஜூன் மாதம் …

இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை …

தமிழ்நாட்டில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மற்றும் மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தின் சில …

ரிமல் புயல் கரையைக் கடந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மே 25ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. ‘ரிமல்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் …

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை …