ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, மேடையில் நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு எனவும் நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் உள்ளிட்ட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆண், […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் […]
சரியாக மதிப்பு நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப் பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனைமதிப்பு இருக்கும் நிலையில் மாவட்டவருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80% கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்செய்யப்படும் […]
அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலியிறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலியிறுதி சுற்றில் உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சிந்து, காவோ பாங்ஜிசுங் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 20-22 , 13-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். […]
ஆசிய தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தனது கடைசி முயற்சியில் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பத்தம் வென்றார். அத்துடன் அவர் அடுத்த ஆண்டு (2024) பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் […]
ஜூலை 14ஆம் தேதி, இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். விண்வெளி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை நேற்று சந்திரயான் 3 எழுதி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். நேற்று மதியம் சரியாக 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3, நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. திட்டமிட்டவாரே புறப்பட்ட 16-வது நிமிடத்தில் பூமியின் […]
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் சந்தோஷ். ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன்முறையாகும். 400 மீட்டர் பந்தய தூரத்தை 49.40 வினாடிகளில் கடந்து சந்தோஷ் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதனுடன் ஆசிய […]
ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரங்களாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் […]
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி முடித்துவிட்டு போலீஸ் வேலைக்காக படித்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம்பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து […]
தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் போஷம். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு வந்ததும் போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்று மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சாப்பிடுவதற்காக கோழிக்கறி குழம்பு கேட்டுள்ளார். […]