சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி அமெரிக்கர் ஒருவருடன் செல்ஃபி எடுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் பிரமுகரான டிம் பர்செட்,மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார், அந்த செல்ஃபியை ட்விட்டரில் “ஷேம்லெஸ் @narendramodi செல்ஃபி” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு […]

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு 1,87,693 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் மூலமாக கடந்த 2ம் தேதி முடிவுற்றது சான்றிதழை […]

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன்25) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த […]

நாடு முழுவதும் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் விபத்தில் உயிரிழக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்து தற்சமயம் கோயமுத்தூரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் 2 […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் […]

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன பதிலை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் […]

மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்கள் இடையேயான மோதலால் கடந்த இரண்டு மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரின் கிழக்கு பகுதியில் உள்ள இதம் பகுதியில் கங்லேய் யாவோல் கன்னா லுப் (KYKL) மெய்தி போராளிகள் குழு நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த பயங்கரவாத குழுதான் 2015ஆம் ஆண்டு டோக்ரா யூனிட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்தியது. மேலும், பல […]

இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மேலும் கணவனின் ஊதியத்தின் மூலமாக வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம […]

உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும், தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக ஐகோர்ட் நீதிபதியாகவும் பதவி உயர்வு […]

கேரளாவில் யூடியூப் சேனல் நடத்தி அதிக வருமானம் ஈட்டியவர்கள் அதற்கு உரிய வரியை செலுத்தவில்லை என வருமானவரித்துறை கவனத்துக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, கேரளாவில் யூடியூபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பேளிமாணி, ஷெபின், அர்ஜ்யூ, கால்மீ ஷஸ்ஸாம், ஜெயராஜ் ஜி நாத், அகில் என்.ஆர்.டி, எம்4 டெக், அன்பாக்ஸிங் நியூஸ், ரைஸிங் ஸ்டார், ஈகிள் கேமிங், காஸ்ட்ரோ கேமிங் உள்ளிட்ட […]