பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி […]
அமெரிக்கா மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் , பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான […]
ஜப்பானில் 9 பேரை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாப்பானை சேர்ந்த ஷிரைஷி என்பவர், தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஷிரைஷி இதுவரை 8 […]
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் […]
இந்தியாவுடனான இராணு மோதல்களின் போது, தங்களுக்கு முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீனா வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்த காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விவரங்கள் இந்தத் தகவலில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், இந்தியாவின் […]
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு, “ஜெகன் மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி […]
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் வழங்கினார்.. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலியாக உள்ள […]
வயிற்று புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் நோயாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த நோய் பாதிப்பு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளன, மேலும் பல்வேறு வகையான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மேலும் புற்றுநோயின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது ஆபத்தை குறைக்க உதவும்.. புற்றுநோயின் வகை மற்றும் தனிநபரைப் பொறுத்து அறிகுறிகள் கணிசமாக மாறுபடும். அந்த வகையில் இதில் வயிற்றுப் […]
திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]