ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டலைப் புதுப்பிக்க சுமார் ரூ.38 கோடி செலவழித்த சொத்து மேம்பாட்டாளர் இப்போது அதை வெறும் ஒரு பவுண்டுக்கு, அதாவது ரூ.117க்கு விற்கிறார். சொத்து மேம்பாட்டாளர் நயீம் பெய்மன் 2020 ஆம் ஆண்டு நார்தாம்ப்டன்ஷையரின் கெட்டெரிங்கில் உள்ள கிரேடு II லைஸ்டேட் ராயல் ஹோட்டலை சுமார் .26 கோடிக்கு வாங்கினார். 147 ஆண்டுகள் பழமையான இந்த ஹோட்டலை ஒரு ஆடம்பரமான திருமண மண்டபம், உணவகம், இரவு விடுதி […]

நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 விதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில்; விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- விதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் […]

இந்திய விமானப்படை அக்னிவீர் விமான ஆட்சேர்ப்பு 2025க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை 11 முதல் தொடங்கும் மற்றும் தேர்வு செப்டம்பர் 25 அன்று நடைபெறும். இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஏர் இன்டேக் 1/2026க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குவதாக விமானப்படை அறிவித்துள்ளது. இதன் கீழ், விண்ணப்ப செயல்முறை ஜூலை 11 முதல் […]

ஜூலை 1 முதல் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை தொடங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]

இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மற்றொரு போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து […]

திமுகவின் கையாலாகாத்தனத்தை மறைக்க ரயில் கட்டண உயர்வு என முதல்வர் நாடகமாடுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக […]

1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு […]

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ‘ ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம், […]