லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் டக்கெட்டின் 149 ரன்களின் அற்புதமான சதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து […]
தமிழகத்தில் இன்று பலத்த தரைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் 2-3 டிகிரி செல்சியஸ் […]
மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1996 பிரிவு 34ன் படி, அரசு பணியில் இருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 […]
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைகள் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும். தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போல் ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்புடையதாகும். இதை ஆஷாட அமாவாசை என்றும் சொல்லுவதுண்டு. அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆனி […]
`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும். ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் […]
20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு […]
2025-26-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைனில் https://tnmedicalselection.net என்ற இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் […]
திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா..? புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; […]
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 […]