தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது.. விசிக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. அப்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.. […]