fbpx

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பால் பண்ணை அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர்.

மேலும், …

பாட்டியாலா நகரில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குறித்த ஆன்லைன் உணவு விநியோக தளத்திற்கு சமூக ஊடகப் பயனர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு …

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு தொடங்கிய பருவமழை, இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை …

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என சீமான் பரபரப்பாக பேசியுள்ளார்.

தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் …

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதரணியிடம் வாங்க வேண்டும். …

வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், சுவையூட்டப்பட்ட லாலிபாப்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இப்போது வரை, வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் ஓரளவு வேதனையாக இருந்தன. அதற்கு நிறைய திறமை தேவைப்பட்டது. ஆனால், இப்போது விஞ்ஞானிகள் இந்த லாலிபாப்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு விரைவான நோயறிதலாக மட்டுமின்றி, மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும் …

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களும் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. இந்த கார்டு மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற …

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்பட நடிகை ராதா, தனது மகனுடன் சேர்ந்து நடுரோட்டில் இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் முரளி, வடிவேலு இணைந்து காமெடியில் கலக்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் பிரான்சிஸ் …

apologized: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததையடுத்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் …

Modi: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் …