நீலகிரியில் தொடர் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், […]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதஇகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் […]
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்த சின்ன மாடன் குடியிருப்பில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (16) என்ற மகன் உள்ளார். விஜயும் அதே பகுதியை சேர்ந்த விஜையின் உறவினரான மூக்காண்டியின் மகள் மேகலாவும் (15) காதலித்து வந்தனர். இது அவர்கள் வீட்டில் தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இது குறித்து மேகலாவின் தந்தை […]
பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிஸ் ரஞ்சன். இவருக்கும் இவரது மாமியார் பூஜாவுக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடிவெடுத்து, ஊரை விட்டு வெளியேறி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிறகு கிரேட்ரா நொய்டாவுக்கு சென்று அங்குள்ள செட்டாகமாவில் வீடு வாடகைக்கு எடுத்து […]
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையில் அமைந்துள்ள நேமூர் கிராம பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது அங்கு துர்க்கை என்ற பெயரால் மக்கள் தற்போது வணங்கும் பல்லவ பேரரசின் காலத்தில் வடிக்கப்பட்ட கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்பம் குறித்து கள ஆய்வில் ஈடுபட்ட ழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன், திருவாமாத்தூர் கண.சரவணக்குமார் ஆகியோர் கூறியதாவது:- துர்க்கை என்ற பெயரால் மக்கள் தற்போது வணங்கும் […]
1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் தொழிலதிபருமான ரிபுத் மன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 325 பயணிகள் உயிரிழந்தனர்.. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரிபுத் மன் சிங், வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். எனினும் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து […]
தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.. தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கின்றனர்.. ஆனால் இது ஆகம விதிகளுக்கு எதிரானது.. எனவே ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத […]
முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி […]