இரவில் சரியான பழங்களை சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு இயற்கையான இரவு சீரம் போன்றது. தூக்கத்தின் போது, ​​உடல் பழுதுபார்க்கும் நிலைக்குச் செல்கிறது, இந்த நேரத்தில், சத்தான பழங்கள் சரும செல்களை உள்ளிருந்து ஊட்டமளித்து, அவற்றின் பளபளப்பை மேம்படுத்துகின்றன. இரவில் சில பழங்களை சாப்பிடுவது அடுத்த நாள் உங்கள் சருமத்தை குறிப்பிடத்தக்க அளவில் பிரகாசமாக மாற்றும். அவற்றின் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றம் பண்புகள் புத்துணர்ச்சியூட்டுகின்றன, பிரகாசிக்கின்றன மற்றும் ஆரோக்கியமாகின்றன. எந்த […]

கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் […]

பலர் தூங்கும் போது ஸ்வெட்டர் அணிவது சௌகரியமாக இருப்பதாகக் கருதுகிறார்கள், குறிப்பாக குளிர்காலத்தில். மேலும், பலர் இரவில் ஸ்வெட்டர் அணிவதை விரும்புவதில்லை. பலருக்கு அவர்களின் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று தெரியவில்லை. எனவே, இரவில் ஸ்வெட்டர் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆராய்வோம். ஆனால் அது நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. நன்மைகள்: அரவணைப்பைப் பராமரித்தல்: குளிர்காலத்தில் ஸ்வெட்டருடன் தூங்குவது உடலை குளிரில் இருந்து பாதுகாக்கிறது […]

அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல். அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான கட்டணம் 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் பிரதிகளைக் கொண்ட நாளிதழ்களில் கருப்பு வெள்ளை விளம்பரங்களுக்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் ரூ. 47.40 என்பது 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.59.68 ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வண்ண விளம்பரங்களுக்கான […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐ.நா. தீர்மானம், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை ஆதரிப்பதோடு, பாலஸ்தீனப் பிரதேசத்தில் சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அனுப்பவும் அங்கீகாரம் அளிக்கிறது. இருப்பினும், இந்த ஐ.நா. நடவடிக்கையை ஹமாஸ் எதிர்க்கிறது. காசா அமைதித் திட்ட முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்து, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், காசா மீது […]

வங்கக் கடலில் 22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு […]

சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு […]

பகலில் ஏற்படும் சலசலப்பு, வேலை அழுத்தம், சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவை நமது தூக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சூடான குளியல் எடுப்பது ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான பழக்கம் மட்டுமல்ல, உடலுக்கும் மனதுக்கும் ஒரு வகையான சிகிச்சையாகும். சூடான நீரின் நீராவி மற்றும் அதன் இனிமையான உணர்வு உடலை ரிலாக்ஸ் செய்து, தசை பதற்றத்தை நீக்கி, உங்கள் மூளையை […]

கடும் பணி நெருக்கடி காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர […]

சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 42 இந்திய யாத்ரீகர்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது சவுதி அரேபியாவின் மதீனா அருகே நேற்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான […]