தவெக தலைவரும் நடிகருமான விஜய் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]

இன்றைய வாழ்க்கை முறையில், இயற்கையின் வரப்பிரசாதம் தான் சீதாப்பழம். குளிர்காலத்தில் சந்தையில் முக்கியமாகக் கிடைக்கும் இந்தப் பழம், சுவைக்கு மட்டுமின்றி, அதன் ஊட்டச்சத்துக்கும் பிரபலமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சீதாப்பழத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகைத் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களின் சீரான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இது […]

எலும்புகள் நம் உடலின் அடிப்படை அமைப்பு. இவை நம்மை நிமிர்ந்து நிற்க உதவுவதோடு, உள் உறுப்புகளை பாதுகாக்கும் அரணாகவும் செயல்படுகின்றன. ஆனால், வயதாக வயதாக எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலிகள், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். பொதுவாக, எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்து மிகவும் முக்கியம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டும் போதாது. பிற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் அவசியம். வயது ஆக ஆக, எலும்புகளின் […]

பாகிஸ்தானின் கராச்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கராச்சியில் நடந்த வெவ்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 8 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். பல்வேறு பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டால்டன்கஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சிறுமியிடம் பெயர் மற்றும் மற்ற விவரங்களை விசாரித்துள்ளனர். பின்னர், இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு […]

79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]