தமிழ்நாடு அரசு, சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 3 முக்கியத் திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சுயதொழில் தொடங்குவதற்கான மானியம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறும் வசதி ஆகியவை அடங்கும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாக, நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் மானியம் வழங்குகிறது. […]
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவிற்கு கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் […]
ஏராளமான இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் இந்திய குடிமக்கள் கனடாவில் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையரான தினேஷ் கே. பட்நாயக் கவலை தெரிவித்துள்ளார். “இங்கு பாதுகாப்பு தேவை என்று நானே உணருவது விந்தையாக இருக்கிறது” என்று கூறிய அவர், சில கனடியர்கள் இதுபோன்ற பிரச்சினையை உருவாக்குகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கனடா இதை ஒரு இந்தியப் பிரச்சினையாக […]
நாடு முழுவதும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இந்த ஒளியின் திருநாளைக் கொண்டாடினர். இருப்பினும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாகச் […]
சப்த கன்னிகளுள் ஒருவராகத் திகழும் வாராகி அம்மன், உருவத்தில் மாறுபட்டிருந்தாலும் தாய்மை நிறைந்த உள்ளம் கொண்ட தெய்வம். துயரத்தோடு தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு அருள்புரியும் அற்புதமான சக்தி கொண்டவள் இந்த அன்னை. வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான வழிபாடு, நம்முடைய துயரங்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. கடன், நிம்மதியின்மை, தொடர் தோல்விகள் எனப் பிரச்சனைகள் […]
நாம் தமிழர் கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் […]
எல்லையில் அதிகரித்த பதட்டங்கள் மற்றும் இராணுவ மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் தக்காளி உட்பட பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் உள்நாட்டு சந்தை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தக்காளி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. லாகூர், கராச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில், தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.700 ஐ எட்டியுள்ளது. சமையலறையில் ஒரு முக்கிய பொருளான […]
மழை காலத்தில் தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது. […]
தீபாவளி முடிந்து மக்கள் ஊர் திரும்ப இருக்கும் நிலையில், சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் கொண்டாடவும், பின்னர் தாங்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திரும்புவதற்கும் ஏதுவாக தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களிலும் மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்தது. அதன்படி மக்கள் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், […]
தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை கடந்த 17ம் தேதி முதல் துவங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிறந்த முறையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கொசுக்கள் உங்களைக் கடித்தால், அவை அதிக காய்ச்சலை உண்டாக்கி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும். குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த இடத்தை […]

