இந்திய அரசும் நாட்டின் முக்கிய வங்கிகளும் பெண்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக பல சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம், பெண்கள் சிறிய தொகைகளுடன் நல்ல வருமானத்தைப் பெறலாம். மேலும், இந்தத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் எதிர்காலத்தில் நிலையான வருமான ஆதாரமாகவும் செயல்படுகின்றன. இப்போது, ​​இந்தியாவில் பெண்களுக்குக் கிடைக்கும் சில முக்கியமான சேமிப்புத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்… சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா சமூக மற்றும் […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]

புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய வேகத்திலேயே அது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால், சில மாதங்களிலேயே போனின் வேகம் குறையத் தொடங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், போனில் குவியும் தேவையற்ற தரவுகளும் (Clutter), பின்னணியில் இயங்கும் செயலிகளுமே (Background Apps) ஆகும். உங்கள் போனைப் புதிதாக வாங்கிய வேகத்துக்கு மீண்டும் கொண்டு வர சில எளிய பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். கேட்ச் (Cache) கோப்புகளை நீக்குங்கள் […]

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/உம் என மொத்தம் […]

தெலங்கானா மாநிலம் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தில் ஜாதி ஆணவத்தின் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியநாராயணா என்பவரின் 2-வது மகன் சேகர். இவர், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) என்ற இளம் பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சத்தியநாராயணா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால், […]

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]