தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தனது எக்ஸ் தளத்தில்: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, […]
ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் […]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று […]
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பான்புரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாகக் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் பங்கேற்ற சில மாணவிகள் உடை மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறைக்குச் சென்றபோது, 4 மாணவர்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயலில் […]
டெல்லி உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) வழங்குவது தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் மற்றும் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள், தங்கள் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை இந்தத் தீர்ப்பு விளக்குவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு வழக்கறிஞருக்கும், இந்திய ரயில்வேயில் ‘குரூப்-ஏ’ அதிகாரியாகப் பணியாற்றும் […]
அமெரிக்காவில் அடுத்த 12 மாதங்களுக்குள் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 35% ஆக இருந்த நிலையில், தற்போது 30% ஆகக் குறைந்துள்ளதாக குளோபல் ரேட்டிங்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் சத்யம் பாண்டே தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்த வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலகப் பங்குச்சந்தைகள் ஏற்கனவே சரியத் தொடங்கியுள்ளன. ஜேபி மோர்கன் (J.P. Morgan) போன்ற நிதி நிறுவனங்கள், அமெரிக்க […]
தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் ‘கங்கா ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்துப் பொதுமக்கள் இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது பட்டாசு வெடிப்பதைத்தான். வண்ணமயமான வானவெடிகளையும், சத்தமிடும் பட்டாசுகளையும் வெடித்து மகிழ்வது தீபாவளியின் பிரிக்க முடியாத பாரம்பரிய அங்கமாக உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான […]
திரை நட்சத்திரங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பண்டிகை தினங்களில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து வாரியாக பெண்கள் அளித்த விண்ணப்பங்களில், தகுதியுள்ள பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் முடிவில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று […]
இந்தியாவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் பெரும்பாலும் நாள்தோறும் ஆகம விதிமுறைகளின்படி, 5 முதல் 6 காலப் பூஜைகளுடன் நடத்தப்படுவது வழக்கம். கிராமப்புறக் கோவில்களில் விசேஷ நாட்களில் மட்டுமே சிறப்புப் பூஜைகள் நடந்தாலும், பெரும்பாலான ஆலயங்கள் தினந்தோறும் திறந்தே இருக்கும். ஆனால், கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஹாசனாம்பா அம்மன் கோவில் முற்றிலும் விதிவிலக்கானது. இந்தக் கோவில், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, அதிகபட்சமாக […]

