டெட் தேர்வெழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் பல லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் […]
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற, சிறை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீததனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடவே, கடந்த 1980-ல் வன்னியர் சங்கத்தை ராமதாஸ் தொடங்கினார். […]
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பேசிய அவர்; தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உடைந்த எலும்புகளை 2-3 நிமிடங்களில் ஒட்ட வைக்கக்கூடிய, உலகின் முதல் ‘எலும்பு பசையை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்… இந்த உயிரியல் பசை கடல் ஓடுகளால் ஈர்க்கப்பட்டு, கடலில் உள்ள பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. இது முற்றிலும் மக்கும் தன்மை கொண்டது.. மேலும் இது 6 மாதங்களில் உடலில் கரைந்து, உலோக உள்வைப்புகளின் தேவையை நீக்குகிறது. சீனாவின் வென்ஜோ நகரத்தைச் சேர்ந்த டாக்டர் லின் ஜியான்ஃபெங் மற்றும் […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள 8 விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் ஃபெவிக்விக் என்ற வலுவான பசை மருந்தை கண்களில் ஊற்றியதால், அவர்களின் கண்களில் காயம் ஏற்பட்டது. ஃபிரிங்கியா தொகுதியின் சாலகுடாவில் உள்ள செபாஷ்ராம் பள்ளியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கோச்சபாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள […]
ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் இணைந்ததால் ‘சஷி யோகம்’ உருவாகும். இந்த யோகத்துடன், ‘பரிவர்த்தன யோகம்’, ‘ரவி யோகம்’ மற்றும் ‘சுனப யோகம்’ போன்ற பல நல்ல யோகங்களும் உருவாகின்றன, இவை 5 குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ரிஷபம் இந்த நல்ல யோகங்கள் ரிஷப […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (38), இவரது நண்பன் சந்திரன் (35). இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, சந்திரன் தனது தாத்தா, பாட்டியை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார். இந்த கொலைக்கு அவரது நண்பரான நல்லசாமியும் உதவியுள்ளார். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சந்திரன், தனது நண்பன் நல்லசாமியின் மனைவி […]
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது சந்தியா என்ற இளம்பெண், கணவர் சிவா பெங்களூருவில் வேலை பார்த்ததால் தனியாக வசித்து வந்தார். இதை சாதகமாக்கிக் கொண்டு குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 ஆண்களுடன் சந்தியா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஒரு நாள் இரவு, சந்தியாவின் வீட்டிற்கு வந்த குமரேசன், சந்தியாவுக்கு விக்னேஷுடன் தொடர்பு இருப்பது அறிந்து ஆத்திரமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த குமரேசன், […]
உத்தரப்பிரதேச மாநிலம் கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த பரூக் (35) என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக, அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொலைபேசி சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பரூக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், பரூக்கின் மனைவி அம்ரின் (34) மற்றும் அவரது சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. பரூக்கின் தொலைபேசி சுவிட்ச் […]

