‘இரிடியம் மோசடி’ தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் […]
உக்ரைனுடனான அமைதிப்பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளது என, ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடின், ‘உக்ரைன் உடனான போரை […]
“ஊழல் இல்லாததாக” நாடாக மாற்றுவதற்காக அல்பேனிய பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் டிஜிட்டல் அமைச்சரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார். ஐ தொழில்நுட்பத்தின் […]
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி […]
ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என சொல்லப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தலில் ஒரு வாக்கில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான். ஆனால் அதிமுக தலைமையோ பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்காமல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் நீக்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நிர்வாகிகள் […]
நாம் செய்யும் சில தவறுகளால் நம் முன்னோர்களின் ஆத்மாக்களின் ஆசி கிடைக்காமல் போவதையே பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம். இந்த தோஷம் இருந்தால், வாழ்வில் பலவிதமான துன்பங்கள், தடைகள், பணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்ற சூழல் உருவாகும். பித்ரு தோஷம் உள்ளதா என அறிவது எப்படி..? உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லை என்றால் பித்ரு தோஷமும், சந்திரன் சரியில்லை என்றால் […]
பன்னாட்டு சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த பதிவில், புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய மேலாளரின் கீழ், இந்திய ஊழியர்களுக்கு எதிராக கலாச்சார அக்கறையின்மை, பாகுபாடு மற்றும் நச்சுத்தன்மை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததாகக் கூறும் பெயரில்லா ரெடிட் பயனர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட (acquisition) செயல்முறைக்குப் பிறகே இந்த பிரச்சினைகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் […]
தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்: முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக மாநில […]

