அரசுப் பணியாளர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; முனைவர் பட்டம் பெற்றால் ரூ.25,000 ஊக்க ஊதியத்தொகையும் , பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவர்க ளுக்கு ரூ.20,000 , பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருந்தால் ரூ.10,000 வீதம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அரசாணைப்படி 2020-ம் […]

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார், இந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்தது. கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் […]

தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள், மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-20231 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவ்வாறான […]

அசாம் மாநிலத்தில் முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், அவருக்கான […]

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் […]

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

ஆந்திராவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் தனித்தனியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் […]

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. […]

2ஜி வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு […]

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி சுசிலா வயது 34. இந்தக் தம்பதிக்கு, குமரேசன் (15), கவுசிக் (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். கஜேந்திரன் மற்றும் சுசிலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவனை பிரிந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சுசிலா. திருத்தணி காந்திரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த சுசிலா […]