தென்னாப்பிரிக்கா லீக் 2026க்கான ஏலத்தில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பரபரப்பை ஏற்படுத்தி வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார். இந்த வீரர் ஏலத்தில் ஆடம் மார்க்ராமை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தென்னாப்பிரிக்காவின் T20 லீக் SA20 இன் வரவிருக்கும் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்து வருகிறது. இந்த பெரிய ஏல நிகழ்வில் உலக கிரிக்கெட்டில் இருந்து பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். இந்த லீக்கின் நான்காவது சீசன் டிசம்பர் […]

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் […]

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை […]

நேபாளத்தின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து, நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் […]

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூ சுற்றி வரும் […]

மழைக்காலம் மற்றும் குளிர் காலம் தொடங்கியவுடன், சிலந்திகள் பெரும்பாலும் வீடுகளில் காணப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலந்திகளுக்கு பயப்படுபவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், சில எளிதான மற்றும் மலிவான வீட்டு வைத்தியங்கள் மூலம், உங்கள் வீட்டை சிலந்திகளிடமிருந்து பாதுகாக்க முடியும். துப்புரவு நிபுணர்களின் கூற்றுப்படி, சிலந்திகள் சில வலுவான மணம் கொண்ட பொருட்களை விரும்புவதில்லை. குறிப்பாக சமையலறையில் இருக்கும் இலவங்கப்பட்டை அவற்றின் மிகப்பெரிய எதிரி. உங்கள் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் […]

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது நேற்று இரவு இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் […]

திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது. சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர். கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட […]