மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படும் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியர்வர் தலைமறைவாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட சாமியார், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்று அறிக்கை மேலும் கூறியது. விசாரணையின் போது, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் EWS உதவித்தொகையின் கீழ் 32 பெண் PGDM மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இவர்களில் 17 மாணவிகள், சாமியார் தவறான மொழியைப் பயன்படுத்தியதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. மேலும் அந்நிறுவனத்தின் சில ஆசிரியர்களும், நிர்வாக ஊழியர்களும் மாணவர்களை சாமியாரின் கோரிக்கைகளுக்கு இணங்க அழுத்தம் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் 16 பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒரு நீதிபதி முன் சாட்சியம் அளித்தனர்.
நிறுவனத்தின் அடித்தளத்தில், சரஸ்வதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலியான ராஜதந்திர எண் தகடு கொண்ட 39 UN 1 என்ற வால்வோ காரையும் போலீசார் கண்டுபிடித்தனர்..
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25 அன்று தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவானதாகவும், அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்..