Covai: பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை காமாட்சிபுரத்தில் நேற்று இரவு விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டதாக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது வாக்குவாதம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரில் அண்ணாமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு, அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாஜக அமைச்சர்களுக்கு சவால்!… உபி-க்கு மட்டும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்!… ஸ்டாலின்!

Mon Apr 15 , 2024
Stalin: உத்தர பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ.க. அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான […]

You May Like