Fishing: இன்று நள்ளிரவு முதல் மீனவர்களுக்கு வந்த தடை உத்தரவு…!

இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இக்காலகட்டம் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலகட்டம் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்க உள்ளது. எனவே, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அதே போல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல், சந்திரபாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வானகிரி, குழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள், ஜூன் மாதம் 14-ம் தேதி வரை, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது.

தடை காலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1000 விசைபடகுகள், நாகை, தஞ்சை, புதுச்சேரியில் 1424 விசைபடகுகள் என 13 கடலோர மாவட்டங்களில் சுமார் 15,000 விசைபடகு கரை நிறுத்தப்படும்.

Vignesh

Next Post

20 கிலோ வெடிபொருட்களுடன் ஈரான் ட்ரோன்கள்!… 9 மணிநேரத்தில் வெடிக்கும்!… இஸ்ரேல் மீது தொடங்கியது போர்!

Sun Apr 14 , 2024
Iran – Isreal war: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த டஜன் கணக்கில் 20 கிலோ வெடிப்பொருட்களுடன் ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தற்போது நேரடியாக தலையிட்டு உள்ளது. இத்தனை காலம் மறைமுகமாக ஹெஸ்புல்லா இயக்கம் வழியாக ஈரான் இஸ்ரேலை தாக்கி வந்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக […]

You May Like