Election 2024 | “பாகுபலி ராகுல் காந்தி; மோடி காலி”… திருப்பூர் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!

ELECTION: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி நேற்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார் . அவர் கோவை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் தமிழக வருகை மோடியின் தூக்கத்தை கெடுத்து விட்டது என கூறி இருக்கிறார். தொடர்பாக திருப்பூர் பிரச்சாரத்தில் பேசிய ஒருவர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் தமிழக வருகை மோடியின் மொத்த பிரச்சாரத்தையும் காலி செய்து விட்டது என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பங்கேற்ற கோவை பிரச்சார பொதுக்கூட்டம் பாகுபலி போல பிரம்மாண்டமாக இருந்தது என தெரிவித்த மு.க ஸ்டாலின் சமூக நீதி மற்றும் ஜனநாயகம் செழித்து வளர இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் எனவும் பொதுமக்களை அவர் எச்சரித்தார். முதல்வர் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Read More: MSC ARIES: உச்சகட்ட பதற்றம்.!! 17 இந்தியர்களுடன் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பல்.!! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை.!!

Next Post

PMO MODI | "யார் அந்த கத்துக்குட்டி.?"… கேமர்களுடன் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சீண்டிய பிரதமர் மோடி.!

Sat Apr 13 , 2024
PMO MODI: இந்தியாவின் தலைசிறந்த வீடியோ கேமர்களுடன் நேரலை உரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை கத்துக்குட்டி என்று பொருள்படும் நூப்(noob) என்ற வார்த்தையை பயன்படுத்தினார். விளையாட்டில் புதிய அல்லது திறமை இல்லாத ஒருவரை குறிக்கும் வார்த்தையை பிரதமர் எதிர்க்கட்சியினரை பார்த்து குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் போது நான் இந்த வார்த்தையை (நூப்) பயன்படுத்தினால், நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள். நான் இதைச் சொன்னால், நீங்கள் ஒரு […]

You May Like