மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…! தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு சீட்…!

EPS 2025

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு.


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல, அதிமுகவின் சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிகிறது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கக்கூடிய நிலையில் 3 இடங்கள் திமுகவுக்கும் ஒரு இடம் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் மநீம வேட்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிர்வாகக்குழு – செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் தற்பொழுது அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.

Read More: பட்டா மாற்றம் செய்யும் நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…! இன்று அரசு சார்பில் சிறப்பு முகாம்..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

தேமுதிக கூட்டணியில் மாற்றம்..? முதல்வரை மறக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டு பிரேமலதா சொல்லும் சேதி என்ன..?

Sun Jun 1 , 2025
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என […]
stalin premalatha

You May Like