பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை…! இன்று முதல் 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…!

bus 2025 5

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும்.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அக்.4, 5-ம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பயணிக்க இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதல் முறை!. பைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!. நாக் அவுட் சுற்றில் வங்கதேசம் வெளியேற்றம்!.

Fri Sep 26 , 2025
ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. வங்கதேசம் நாக் அவுட் சுற்றில் வெளியேறியது. 2025 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும். அதாவது இந்த போட்டி 41 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. இதுவரை இந்திய அணி 8 முறை […]
india vs pakistan final

You May Like