பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டம்…! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!

tamilnadu cm mk stalin

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்: கடந்த 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினராக எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான். அதை ஏற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய திட்டம்தான் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகளை திமுக ஆட்சியில் இயக்கி வருகிறோம். போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும், துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் அறிக்கை:

மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இறுதிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30.09.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, 31.10.2025 வரை மேலும் ஒரு மாத காலத்திற்க்கு நீட்டித்து பயணிகள் சிரமுமின்றி பயணம் செய்யலாம்.

மேலும் பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க ஏதுவாகவும், இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பயனாளிகளும் பயன் பெறும் வழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Sat Sep 13 , 2025
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர […]
cyclone rain 2025

You May Like