தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் மக்கள் மீது பாசம் கொண்டு தனது சொந்த பணத்தில் அணையை கட்டினார்.. அவருக்கு ஜெயலலிதா மணிமண்டபம் கட்டி கௌரவித்தார்.. ஆனால் இங்கிருந்து வெளிநாட்டிற்கு சென்று அங்கு சிலை திறப்பதாக கூறி அதற்குரிய பணத்தை கட்டாமல் புறக்கணித்த முதல்வர் தான் ஸ்டாலின்.
தேர்தல் வந்துவிட்டால் இந்தி எதிர்ப்பு, மொழிக் கொள்கை, மாநில உரிமை எல்லாம் ஸ்டாலினுக்கு ஞாபகம் வந்துவிடும்.. இவற்றில் எதையாவது ஸ்டாலின் செய்திருக்கிறார்.. மத்தியில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தி எதிர்ப்பு வந்தது.. ஆனால் அந்த காங்கிரஸோடு தான் திமுக கூட்டணி வைத்துள்ளது.. ஆகவே திமுக என்பது சந்தர்ப்பவாத கட்சி.. இந்த கட்சி தமிழ்நாட்டை ஆள வேண்டுமா..? காலத்திற்கு ஏற்றவாறு தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் மாற்றிக் கொள்வார்.. பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறம் மாறும்.. அவ்வப்போது நிறம் மாறும் முதல்வர் இந்த முதலமைச்சர் ஸ்டாலின்..
தன்னை கொள்கைப் பிடிப்பு கொண்ட தலைவர் என்று ஸ்டாலின் கூறுகிறார்.. திமுகவும் காங்கிரஸும் ஒரே கொள்கை கொண்ட கட்சியாயா? திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கொள்கை கொண்டவையா? திமுகவும் கம்யூனிஸ்ட்டும் ஒரே கொள்கையா? அப்படி ஒரே கொள்கை என்றால் ஒரெ கடசியாகவே இருந்துவிடலாமே?
கேரளாவில் காங்கிரஸு கம்யூனிஸ்ட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.. அப்ப இவர்கள் ஒத்த கொள்கை உடைய கட்சியா..? ஒரே கொள்கை என்று நாட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.. இப்படி தேர்தல் நேரத்தில் கவர்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி, பொய்யான செய்தியை சொல்லி வாக்கு கேட்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா..?” என்று தெரிவித்தார்..



