மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி… வரும் 27 முதல் 29-ம் தேதி வரை…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்ற உள்ளது.

இது குறித்து மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை; எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்து இரண்டாம்‌ பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக்‌ மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும்‌, எழுத்தும்‌ சார்ந்த தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ கணித பாடத்திற்கான கருத்தாளர்‌ பயிற்சி 27.09.2022 முதல்‌ 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள்‌ மாவட்டங்களில்‌ உள்ள ஒன்றியத்தின்‌ எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல்‌ கற்பித்தல்‌ செயல்பாடுகளில்‌ ஈடுபாடுடன்‌ செயல்படும்‌ கல்வியாளர்கள்‌, ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து வசதிகளையும்‌ கொண்ட பயிற்சி திட்டத்தினை தேர்வு செய்தும்‌, ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும்‌, பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌, முதன்மை கருத்தாளர்‌ பயிற்சி முடிந்த பின்‌ மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம்‌, கலை மற்றும்‌ கைவினை பொருள்கள்‌ செய்யும்‌ ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல்‌ கற்பித்தல்‌ பொருள்கள்‌ செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்‌ முதல்வர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும்‌ எழுத்தும்‌ சார்ந்த பயிற்சி06:10.2022 முதல்‌ 08.10.2022 வரை மூன்று நாட்கள்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ (தலைமை ஆசிரியர்‌ உட்பட) நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொழில் முறையில் தவறு... ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் உத்தரவு...!

Tue Sep 20 , 2022
பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் திருவாளர் சுப்பிரமணியம் பெங்காலி மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலி தொழில் முறையில் தவறாக நடந்துகொண்டதால், அவரை 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனமும் அல்லது கார்ப்பரேட் அமைப்பும் சட்டப்பூர்வ தணிக்கையாளராகவும், உள் தணிக்கையாளராகவும் பணியமர்த்த தடை செய்து நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 132 (4)ன் படி தேசிய […]

You May Like