பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]

அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்வாகிகளை தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்பாளர்​கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் […]

திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]

தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார். அமெரிக்க அரசு தற்போது […]

மோசமான விளம்பர மாடல் போட்டோ ஷூட் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். ஜெயலலிதா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கி, இதுவரை 118 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போது சுமார் […]

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக […]

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். ஜனவரி 9-ல் கடலூரில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எடப்பாடி பழனிச்சாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. […]

திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தொகுதியில் பேசிய அவர், “திமுகவின் 51 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா? கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் 505 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி […]