அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]

மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் […]

அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் கீழ்பென்னாத்தூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாமெல்லாம் விவசாயிகள். அதிமுக 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைக் கொடுத்து பொற்கால ஆட்சியைத் தந்தது. மழை, வெள்ளம் எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை. திமுகவின் 51 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஒவ்வொரு தொகுதிக்கு நான் […]

ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் வந்தவாசியில் பேசிய அவர், ஸ்டாலின் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் […]

தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தூய்மை பணியாளர்கள் சென்னையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே தி.மு.க தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, […]

முன்னாள் அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு […]