சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி […]

திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; இது கரூர் அல்ல, திமுக ஊர். கொட்டும் மழையில்தான் அண்ணா இதேநாளில் வடசென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கி வைத்தார். அதேபோல, இந்தக் கொட்டும் மழையில் உங்கள் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல […]

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போது அனல் பறக்க தொடங்கி உள்ளது.. பிரதான கட்சியான அதிமுக பல அணிகளாக பிரிந்துக் கிடக்கும் நிலையில், அதிமுகவை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார்.. மேலும் கட்சியை ஒருங்கிணைக்கு பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்தார்.. இதனிடையே ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு […]

டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனது ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.. மேலும் பேசிய அவர் “ கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதால் தான் இபிஎஸ் முதல்வரானார்.. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் என பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து […]

பாஜக, ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. […]