கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் […]

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மீது அவதூறு பரப்பிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் உரிய நிபந்தனைகளை விதிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். […]

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு. கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு […]

கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை […]