இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனிக்கவனம் செலுத்தி விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, கடந்த அக்டோபர் […]

தவெக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் குறித்தும் முதலமைச்சரை அவர் விமர்சித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது “திணிக்கப்பட்ட தேர்தல்” என்று வர்ணித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு […]

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்துகளில் ஏறி பெண்களுக்குப் இலவசப் பேருந்துப் பயணச் சீட்டுகளை வழங்கினார். தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆட்சியமைத்த விஜய் தலைமையிலான அரசால் விரிவுபடுத்தப்பட்ட “வெற்றி பயணம்” திட்டத்தின் தொடக்கமே இந்த நிகழ்வாகும். பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இந்த இலவசப் பேருந்து சேவை விரிவாக்கமானது, முந்தைய அரசு செயல்படுத்திய பிரபலமான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, […]

தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று (அக்டோபர் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 12,692 அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன் மூலம் பெண்கள் […]

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செம்மலை, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி சலசலப்பு காரணமாக கடந்த மே மாதம் அவர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்த செம்மலை, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தவெகவில் இணைந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு […]

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன், நொடிப் பொழுதில் காரின் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார். கடத்தல் கும்பல், விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரத்திற்கு அதிவேகமாக காரை இயக்கிச் சென்றது. இதனிடையே தகவல் அறிந்து பின்தொடர்ந்த […]

கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை ED கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், 84 வயதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த போக்சோ வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் […]

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக கடந்த மே 15ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய […]

ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடரில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இப்போட்டியின் 4-வது ஆட்டமாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, சீனாவின் […]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது […]