விசிகவை கழற்றிவிட திட்டமிடும் தவெக? பாமகவுடன் கூட்டணிக்கு காய் நகர்த்தும் விஜய்!. பனையூரில் பரபரப்பு!.

cm vijay thiruma 2

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றிவிடத் தலைவர் விஜய் ஆலோசித்து வருவதாக பனையூர் வட்டாரங்களில் இருந்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிப்பதை விஜய் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற தவெகவின் வெற்றிக்கு ‘SIR’ போன்ற காரணங்களும் பின்னணியாக இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்த கருத்து, தவெக தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த பின்னணியில், விசிகவுடன் தொடர்வதில் உள்ள தயக்கத்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து தவெக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, கணிசமான செல்வாக்குடன் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து, வரவிருக்கும் தேர்தலை மிகவும் வலுவாக எதிர்கொள்ள தவெக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னதாக, சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தவெக தரப்பிலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. தவெகவின் இந்த உத்திகள் மற்றும் கூட்டணிக் கணக்கீடுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இரு கட்சிகளுக்குமான உறவு எதிர்காலத்தில் எத்தகைய திருப்பங்களைச் சந்திக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1newsnationuser5

Next Post

திருப்பதியில் வழி தெரியவில்லையா?. பக்தர்களுக்காக புதிய "கருடா செயலி" அறிமுகம்!.

Sat Oct 10 , 2026
திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களை எளிதில் கண்டறியும் வகையில் ‘கருடா மேப்’ (Garuda Map) அல்லது ‘வெங்கடாத்ரி’ என்ற பெயரில் பிரத்யேக டிஜிட்டல் வழிகாட்டி செயலியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் முதற்கட்டமாக, திருமலையில் உள்ள முக்கியக் கோயில்கள், அன்னப்பிரசாத வளாகம், இலவச பேருந்து நிறுத்தங்கள், குடிநீர் விநியோக மையங்கள், லட்டு கவுன்டர்கள் மற்றும் துணைக்கோயில்கள், தரிசன வழிகள், முடி காணிக்கை, பிரசாத […]
Tirupati 30kb

You May Like