ஆந்திர மாநில பகுதியில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னவரையில் சசிகலா (20) என்பவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் ஒன்றில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் என்றும் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் – ராயகடா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடா பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ​​ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்று தனது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சசிகலா பலமாக சிக்கிக் கொண்டார்.  மேலும் […]

மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.  வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து […]

தேனி மாவட்ட பகுதியில் உள்ள பண்ணைப்புரத்தில் பாண்டி என்பவர் தனது மகள் லட்சிதா வுடன் வசித்து வருகிறார். மகள் பெரியகுளம் பகுதியில் இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.  கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்ற மாணவிகளுக்கான விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இத‌னிடையே நேற்று முன்தைய தினத்தில் காலை நேரத்தில் விடுதியில் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ள இவர் […]

கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற […]

அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ சேலத்தில்‌ 2014 முதல்‌ சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022-ல்‌ நடைபெற உள்ளது. இத்தேர்வில்‌ 2014 முதல்‌ 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ […]

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 இடங்களில் சேர இதுவரை சுமார் 20,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் […]

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 […]

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன […]

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.’ இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை’ வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது. ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் […]

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1, 67,387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி […]