வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவிற்கு கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் […]

ரஷ்யாவுடன் உக்ரைன் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், “புடின் உங்களை அழித்துவிடுவார்” என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ரஷ்ய நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சந்திப்பு சில நேரங்களில் “சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும்” இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திப்பின் […]

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரஷ்யா உடனான இந்தியாவின் எரிசக்தி ஒத்துழைப்பு அதன் தேசிய நலன்களுடன் தொடர்ந்து ஒத்துப்போகிறது என்று கூறினார். இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யுமா என்று கேட்டபோது, ​​அலிபோவ், “இது இந்திய அரசாங்கத்திற்கான கேள்வி. இந்திய அரசாங்கம் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, […]

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஆம், நிச்சயமாக. பிரதமர் நரேந்திர மோடி எனது நண்பர். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவால் அதை ‘உடனடியாக’ செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, ​​வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் […]

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.. விருதை அறிவிக்க இன்னும் சில மணி நேரம் உள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் , பராக் ஒபாமா மீது கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டிற்காக எதுவும் செய்யாத போதிலும் ஒபாமா நோபல் பரிசை பெற்றதாக தெரிவித்துள்ளார்.. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ட்ரம்ப் “ 2009 முதல் 2017 […]

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க லாரி உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “நவம்பர் 1, 2025 முதல், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25% வரி விதிக்கப்படும்” என்று […]

உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், வெள்ளை மாளிகை கியேவுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினார். ஒவ்வொரு ஏவுகணையும் சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் […]