இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளுக்கு முன்புறத்திலேயே எச்சரிக்கை லேபிள் ஒட்டும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு உணவுப் பொருளில் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் பேக்கெட் உணவுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் […]

சாம்பார், பருப்பு, காய்கறி போன்ற உணவுகளுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் பெருங்காயத்தின் தரம் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் சில பெருங்காயப் பொடிகளில், உண்மையான பெருங்காயத்தின் அளவைவிட கலப்படப் பொருட்கள் அதிகமாக இருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்காயப் பொடியில் கலப்படம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தரநிலைக்கு உட்படாத மற்றும் தவறாக […]

10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் ஆலோசனைகள் நடத்தியும், விவாதித்தும், முடிவுகளை ஒத்திவைத்தும் வருகிறது. இதற்கிடையில், நாட்டில் தொற்றா நோய்களின் சுமை சீராக அதிகரித்து வருகிறது. தற்போது நான்கில் ஒரு இந்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த பத்தாண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் முன்புறத்தில் லேபிள் ஒட்டுவது குறித்த விவகாரம்தான் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. அதாவது, உணவுப் […]

உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், தயாரிப்பு லேபிள்கள் மற்றும் நிறுவனங்களின் விதிமுறை இணக்கத்தை தீவிரமாக கண்காணித்து வரும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பல்வேறு உணவு மற்றும் குளிர் பான நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் உணவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், […]

பாக்கெட் உணவுப் பொருட்களில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை தகவலை பேக்கெட்டின் முன்பக்கத்தில் குறிப்பிடுவது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உச்சநீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை, […]

பான் மசாலா பொட்டலங்களுக்கான விதிகளில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பான் மசாலாவை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பிளாஸ்டிக் சார்ந்த அல்லது பிளாஸ்டிக் லேமினேட் செய்யப்பட்ட உறைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில் கவர்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, FSSAI வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் […]

உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]

இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானை தொடர்ந்து இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்த மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், எல்லைப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் (quarantine) வசதிகள் இல்லாததும் இதற்கொரு காரணமாகும். இந்தத் தடையின் காரணமாக, உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. […]